இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இந்தியா கிரிக்கெட் ஆர்வலர்கள் கொண்டாட்டம்.
நேற்று நடந்த பைனலில், உல கின் 'நம்பர்-1' அணியான இந் தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது.
இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து *வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
ஐ.சி.சி., அரங்கில், இந்திய அணி 7வது முறை கோப்பை வென்றது. நேற்று 3வது முறையாக (2002, 2013,2025) சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியா, தலா 2 உலக கோப்பை (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007, 2024) கைப்பற்றியதுஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதுவரை 3 முறை (2002, 2013, 2025) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2006, 2009) உள்ளது. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), இலங்கை (2002), வெஸ்ட் இண்டீஸ் (2004), பாகிஸ்தான் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன. இதில் 2002ல் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வென்ற இந்தியா அணிக்கு கோப்பையுடன், ரூ. 19.49 கோடி சன், பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த நியூசி லாந்து அணி ரூ. 9.74 கோடி பரிசு பெற்றது. பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 10வது சீசன், வரும் 2029ல் இந்தியாவில் நடக்க உள்ளது.
0
Leave a Reply